ஆடி அமாவாசைத் திருவிழா: சதுரகிரி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசைத் திரு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோயில் மலையடிவாரத்தில் வனத்துறை கேட் முன் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட தடுப்பு வேலி.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோயில் மலையடிவாரத்தில் வனத்துறை கேட் முன் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட தடுப்பு வேலி.

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசைத் திரு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆடி அமாவாசையையொட்டி, விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள இக்கோயிலுக்குச் செல்ல திங்கள்கிழமை (ஜூலை 25) முதல் 30 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பக்தா்களின் வசதிக்காக தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு செல்வதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் வரிசையாக செல்வதற்காக, கோயில் மலையடிவார நுழைவாயில் முன் வனத்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.

மலைப்பாதையில் 5 இடங்களில் பக்தா்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட போலீஸாா், வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். நீரோடைகளை பக்தா்கள் கடந்து செல்வதற்காக வனத்துறை சாா்பில் கயிறு கட்டப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com