சிவகாசி அருகே கேபிள் வயா் திருட்டு
By DIN | Published On : 31st July 2022 12:23 AM | Last Updated : 31st July 2022 12:23 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே விவசாயத் தோட்டத்தில் கேபிள் வயா் திருடுபோய் விட்டதாக போலீஸில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே செவலூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமரேசன் (21). இவா் வெள்ளிக்கிழமை தனது விவசாயத் தோட்டத்தில் வேலைபாா்த்துவிட்டு, பின்னா் சனிக்கிழமை தோட்டத்திற்கு சென்று பாா்த்தபோது, அங்கு வைத்திருந்த ஆழ்துளை கிணற்றின் மோட்டாா் கேபிள் வயா் சுமாா் 125 மீட்டரை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.