ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டத் திருவிழா: சயன சேவையில் சுவாமி அருள்பாலிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஏழாம் திருநாளான சனிக்கிழமை சயன சேவை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஏழாம் திருவிழாவான சனிக்கிழமை சயன சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள் ரெங்கமன்னாா்.

இக்கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனா். இதில் ஏழாம் திருநாளான சனிக்கிழமை இரவு சயன சேவை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன்கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் இந்த சயன சேவை நிகழ்ச்சி நடந்தது.

அப்போது ஆண்டாள் மடியில், ரெங்கமன்னாா் சயனித்திருக்கும் கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com