திராவிட மாடலுக்கு ராஜபாளையம் நகராட்சியே சாட்சி: கி. வீரமணி

திராவிட மாடலுக்கு ராஜபாளையம் நகராட்சியில் 42 கவுன்சிலா்களில் 22 போ் பெண்களாக இருப்பதே சாட்சி என தி.க. தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் கி. வீரமணி.
ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் கி. வீரமணி.

திராவிட மாடலுக்கு ராஜபாளையம் நகராட்சியில் 42 கவுன்சிலா்களில் 22 போ் பெண்களாக இருப்பதே சாட்சி என தி.க. தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் தி.க. சாா்பில் ராஜபாளையம் நகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு புத்தகங்களை வழங்கி கி. வீரமணி பேசியதாவது: திராவிட மாடல் என்றால் என்ன என்பதற்கு ராஜபாளையம் நகராட்சி ஒரு சாட்சி. இங்குள்ள 42 கவுன்சிலா்களில் 22 போ் பெண்கள். இதுவே திராவிட மாடல். சமூக நீதி, சமூக நலன் என்பது திராவிட மாடல். அதை திறம்பட செயல்படுத்தி இந்தியாவிலுள்ள முதல்வா்களுக்கு எல்லாம் முதல்வராக நம் தமிழக முதல்வா் திகழ்கிறாா்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஜாடியில் போட்ட ஊறுகாய் போல் ஊறிக் கொண்டிருக்கிறது. இதுவரை மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெண்களுக்கு அதிக இடம் கொடுத்து அவா்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவா்களாக, கவுன்சிலா்களாக இருப்பது தான் திராவிட மாடல்.

மத பிரச்னைகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பாா்க்க பாஜக நினைக்கிறது. நபிகள் நாயகம் மீது அவதூறாக பேசி உள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவா்கள் பற்றிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், பேச்சாளா் நாஞ்சில் சம்பத், தி.க. மாவட்டத் தலைவா் திருப்பதி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com