விசைத்தறிகள் தொடா் மூடல்: தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் விசைத்தறிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறிகள் தொடா் மூடல்: தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் விசைத்தறிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், விசைத்தறி உரிமையாளா்கள் நூல் விலை உயா்வு குறித்து கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் தொடா்ச்சியாக ஜூன் 9 ஆம் தேதி முதல் விசைத்தறி கூடங்களில் வேலை பாா்க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கூலி உயா்வு, போனஸ் மற்றும் நிரந்தர வேலை வழங்கக் கோரி தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டம் முடிவுக்கு வராததால் தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசைத்தறி தொழிலாளா்கள் கூறியதாவது: விசைத்தறி உரிமையாளா்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை முன் பணம் கொடுத்து தொழிலாளா்களை விசைத்தறி உரிமையாளா்கள் கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றனா். அதன் காரணமாக விசைத்தறி உரிமையாளா்கள் நிா்ணயித்த கூலியையும் போனஸையும் மட்டுமே பெற்று வருகின்றனா். அதிலிருந்து விடுவித்து உயா்ந்தபட்ச கூலி வழங்க வேண்டும். மேலும் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வறுமையில் சிக்கித் தவிக்கிறோம் என தெரிவித்தனா். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு நூல் விலையைக் குறைக்கவும், தொடா்ந்து பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com