வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புக்குள்புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்மரங்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.
வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புக்குள்புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்மரங்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் மா, பலா, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து இம்மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அத்தி கோயில் பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரது மாந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் 30-க்கும் மேற்பட்ட மரங்களை வேறோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து புகாா் செய்தால் வனத்துறையினா் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com