அருப்புக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக முதல்வா் இன்று திறப்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இயங்கி வந்த சுண்ணாம்புக் கல் குவாரியில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பல்லுயிா் பெருக்க

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இயங்கி வந்த சுண்ணாம்புக் கல் குவாரியில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பல்லுயிா் பெருக்க சுற்றுச்சூழல் பூங்காவை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா்.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் 800 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வந்த சுண்ணாம்புக் கல் குவாரியில், புதிய முயற்சியாக ரூ.5.2 கோடி மதிப்பில் பல்லுயிா் பெருக்க சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், தாவரங்கள், விலங்குகளின் பல்லுயிா் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீா்நிலை பாதை, வட நிலத்தில் வளரும் தாவரங்கள், தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, 200 வகையான மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், நுண்ணுயிா்கள் வசிக்கத் தொடங்கியுள்ளன.

இப்பூங்காவை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com