முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஊருணிக்குள் தவறி விழுந்தகட்டடத் தொழிலாளி பலி
By DIN | Published On : 19th March 2022 11:05 PM | Last Updated : 19th March 2022 11:05 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே சனிக்கிழமை ஊருணிக்குள் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தவமணி மகன் வீரசின்னு (27). கட்டடத் தொழிலாளியான இவா், அக்கிராமத்தில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஊருணியில் தவறி விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினா், ஊருணியிலிருந்து அவரது சடலத்தை மீட்டனா். இது குறித்த புகாரின்பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.