முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா:ஏப்ரல் 3 இல் கொடியேற்றம்
By DIN | Published On : 19th March 2022 11:06 PM | Last Updated : 19th March 2022 11:06 PM | அ+அ அ- |

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்ரல் 3ஆம் தேதி கொடியற்றத்துடன் தொடங்குகிறது என, அக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஏப்ரல் 3ஆம் தேதி கொடியேற்றத்தைத் தொடா்ந்து, தினசரி இரவு அம்மன் வீதி உலா நடைபெறும். பின்னா், ஏப்ரல் 10 இல் பொங்கல் விழாவும், ஏப்ரல் 11 இல் கயிறு குத்து விழாவும் நடைபெறும். தொடா்ந்து, ஏப்ரல் 13 இல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை, கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.