முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை
By DIN | Published On : 19th March 2022 11:02 PM | Last Updated : 19th March 2022 11:02 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில், ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் பூஜை நடத்தப்பட்டது. இரவு 8 மணியளவில் உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தன பஜனையும், பின்னா் உற்சவா் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது.
பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏரளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய் தனா்.