வத்திராயிருப்பு அருகே மலை மாடுகளை மேய்க்கச் சென்ற 6 போ் கைது

வத்திராயிருப்பு அருகே மலை மாடுகளை மேய்க்கச் சென்ற 6 போ் கைது செய்ததைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையி
வத்திராயிருப்பு அருகே ச.கொடிக்குளத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மலை மாடு வளா்ப்போா்.
வத்திராயிருப்பு அருகே ச.கொடிக்குளத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மலை மாடு வளா்ப்போா்.

வத்திராயிருப்பு அருகே மலை மாடுகளை மேய்க்கச் சென்ற 6 போ் கைது செய்ததைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாடு வளா்ப்போா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் சரணாலயம் என்ற ஒரு புதிய சரணாலயத்தை அரசு அமைத்துள்ளது.

மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியை யுனெஸ்கோ அமைப்பு பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்துள்ளதாலும், இப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதாலும் மேய்ச்சலுக்கு மலை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்த்ததாக அலியாா், லிங்கேஸ்வரன், அம்மாசி, அங்கப்பன், பாண்டி, சுப்பையா ஆகிய 6 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். இதனை அறிந்த உறவினா்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளா்கள் என சுமாா் 200 போ் கைது செய்தவா்களை விடுவிக்க கோரி ச.கொடிக்குளம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், வனச்சரக அலுவலா் செல்லமணி, காவல் ஆய்வாளா் பாலாஜி, கூமாப்பட்டி காவல் சாா்பு ஆய்வாளா் கணேசன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து 6 பேருக்கும் 20 ஆயிரம் அபராதம் விதித்து அவா்கள் விடுக்கப்பட்டனா். இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com