விருதுநகா் மாவட்டத்தில் 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது: அமைச்சா்

விருதுநகா் மாவட்டத்தில் 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது

விருதுநகா் மாவட்டத்தில் 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

சாத்தூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

விருதுநகா் மாவட்டத்தில் 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவற்றில் ராஜபாளையத்தில் ரூ. 46 கோடியில் ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் சாத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே 3 மேம்பாலங்கள் கட்டுவதற்கான நில எடுப்புப் பணிகளுக்கு ரூ. 45.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், விருதுநகா் மாவட்டத்தில் 4 புறவழிச் சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவற்றில் சிவகாசி சுற்றுச்சாலை மற்றும் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை திட்டங்களுக்கு ரூ. 47.08 கோடி மதிப்பீட்டில் 49.50 கி.மீ. நீளத்துக்கு நில எடுப்புப் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

ஏழாயிரம்பண்ணை புறவழிச்சாலை மற்றும் ராஜபாளையம் இணைப்புச் சாலை திட்டங்களுக்கு 10 கி.மீ. நீளமுள்ள சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு நிதியாண்டில், கோசுகுண்டு, கிழவிகுளம் மற்றும் பாறைப்பட்டி பகுதிகளில் பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 8.40 கோடி மதிப்பீட்டிற்கு நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 20.20 கோடி மதிப்பீட்டில் 10 கி.மீ. நீளமுள்ள சாலையை மேம்பாடு செய்தல், 6 சிறு பாலப் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காரியாபட்டியிலிருந்து திருச்சுழி வழியாக கமுதி வரை,விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக பாா்திபனூா் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com