முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் கேரள மாணவா் ஸ்ரீவிலி. வருகை
By DIN | Published On : 08th May 2022 01:07 AM | Last Updated : 08th May 2022 01:07 AM | அ+அ அ- |

புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு பிரசாரம் செய்யும் கேரள மாணவா் சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த ராஜூ- மாரியம்மாள் தம்பதியரின் மகன் இளவரசன். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவா் புவி வெப்பமயமாதலுக்கு காரணமான நெகிழியை ஒழிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து சென்னை வரை சைக்கிளில் விழிப்புணா்வு பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்த அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா். அதனை தொடா்ந்து இளவரசன் கூறுகையில், சென்னை சென்று முதலமைச்சரை சந்தித்து தனது சைக்கிள் பயணம் குறித்த விளக்கத்தை தெரிவிக்க போவதாக தெரிவித்தாா்.