முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா் அருகே பதுக்கல் :33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 08th May 2022 01:05 AM | Last Updated : 08th May 2022 01:05 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ரேஷன் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் அருகே பாழடைந்த கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது 33 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சோ்ந்த சக்கரைபாபு மகன் விக்னேஷ் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.