முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகரில் தோ்வு அச்சம் காரணமாக திங்கள்கிழமை இரவு பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் வீரபத்திரன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகள், விருதுநகா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதை தந்தை கண்டித்தாராம். இந்நிலையில் பிளஸ் 1 தோ்வு தொடங்க இருந்த நிலையில், தோ்வு அச்சம் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.