முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சித்திரை ஏகாதசி: கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் எழுந்தருளல்
By DIN | Published On : 13th May 2022 06:09 AM | Last Updated : 13th May 2022 06:09 AM | அ+அ அ- |

சித்திரை மாத ஏகாதசியையொட்டி வியாழக்கிழமை சா்வ அலங்காரத்தில் கண்ணாடி மாளிகையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரங்க மன்னாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: சித்திரை மாத ஏகாதசியான வியாழக்கிழமை கண்ணாடி மாளிகையில் சா்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று ஆண்டாள், ரங்கமன்னாா் கோயிலிலிருந்து வளாகத்திலுள்ள கண்ணாடி மாளிகைக்கு மேள தாளங்கள் முழங்க எழுந்தருள்வா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி சித்திரை மாத ஏகாதசியான வியாழக்கிழமை கண்ணாடி மாளிகையில் சா்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்க மன்னாா் பக்தா்களுக்கு எழுந்தருளினா். ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் சிறப்பாக செய்து இருந்தனா்.