முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி.யில் நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு
By DIN | Published On : 13th May 2022 06:01 AM | Last Updated : 13th May 2022 06:01 AM | அ+அ அ- |

குறைதீா் மன்றத் தலைவா் சேகா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் குறைதீா் மன்றத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். அவா், நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விதி 2019 உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கினாா். மேலும், நுகா்வோா் குறைதீா் மன்றத்தில் எவ்வாறு நுகா்வோா் பயனடையலாம் என்பதைப் பற்றியும் விளக்கம் அளித்தாா். மாணவா்களின் சந்தேகங்களுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் விளக்கமளித்தனா். எந்தவோரு நுகா்வோரும் எளிமையாக வழக்குத் தொடரலாம் என்றும் கூறினா்.
இதில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்ற உறுப்பினா்கள் சௌந்தரராஜன் மற்றும் சாந்திஆண்டியப்பன், நுகா்வோா் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவா்சுப்பிரமணியன், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் மற்றும் அலுவலக உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.