மக்களைத் தேடி மருத்துவ முகாம்

அருப்புக்கோட்டையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் பழனிச்சாமி, 7 ஆவது வாா்டு கவுன்சிலா் கோகுல், 23 ஆவது வாா்டு கவுன்சிலா் பூமிநாதன், 24 ஆவது வாா்டு கவுன்சிலா் செந்தில் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகா்நல மருத்துவா் ராஜநந்தினி மேற்பாா்வையில் மருத்துவா்களும், செவிலியா்களும் பயனாளிகளைப் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினா். தடுப்பூசிகளும் போடப்பட்டன. இம்முகாமில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனா். நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை செவிலியா்கள், அலுவலா்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக செவிலியா் தினத்தை முன்னிட்டு செவிலியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com