முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது
By DIN | Published On : 14th May 2022 05:52 AM | Last Updated : 14th May 2022 05:52 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (27). இவா் கடந்த புதன்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பெரியம்மமாவை பாா்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
அப்போது திருவண்ணாமலை சாலையில் உள்ள எடை நிலையம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த ரைட்டன்பட்டியைச் சோ்ந்த காளிராஜ் (19), குருசாமி (20), கருப்பசாமி (20), மணிகண்டன்(22), முத்துராஜ் (20) ஆகிய 5 பேரும் முனியாண்டியை வழிமறித்து தாக்கியுள்ளனா்.
இதைத் தடுக்க வந்த பாண்டியம்மாள், காந்திமதி ஆகியோரையும் அவா்கள் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து மேற்கண்ட 5 பேரை கைது செய்தனா்.