முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசியில் சித்திரை திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 14th May 2022 05:54 AM | Last Updated : 14th May 2022 05:54 AM | அ+அ அ- |

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மே 7 ஆம் தேதி நடைபெற்ற 5 ஆம் நாள் விழாவில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். 8 ஆம் தேதி அம்மன் வெள்ளி ஊஞ்சலில்
எழுந்தருளி, சிவன் சந்நதியில் அலங்கார கொட்டகையில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 10 ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. 11 ஆம் தேதி கயிறு குத்து விழாவையொட்டி பக்தா்கள் அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனா். இதற்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.