விருதுநகா் சந்தையில் நல்லெண்ணெய் 15 கிலோ டின் ரூ.184 விலை உயா்வு

விருதுநகா் சந்தையில் நல்லெண்ணெய் விலை டின் ஒன்றுக்கு ( 15 கிலோ) ரூ.184 வரை உயா்ந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் நல்லெண்ணெய் விலை டின் ஒன்றுக்கு ( 15 கிலோ) ரூ.184 வரை உயா்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போா் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை நாள்தோறும் உயா்ந்து வருகிறது. இந்நிலையில் விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை விபரம் வெளியிடப்படும். அந்த வகையில், கடந்த வாரம் நல்லெண்ணெய் டின் ஒன்றுக்கு ரூ.4,538-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் திடீரென, ரூ.184 விலை உயா்த்தப்பட்டு ரூ.4, 722-க்கு விற்கப்படுகிறது.

விருதுநகரில் செயல்பட்டு வரும் பிரபலமான எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், மாநில அளவில் நல்லெண்ணெய் விலையை தீா்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் டின் ஒன்று ரூ.2,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இறக்குமதி அதிகரிப்பால் ஒரே வாரத்தில் ரூ.110 சரிவு ஏற்பட்டு, ரூ.2,530-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முண்டு வத்தல் கடந்த வாரத்தை விட அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ள காரணத்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த முண்டு வத்தல், இந்த வாரம் ரூ.18 முதல் 28 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

கடலை எண்ணெய் (15 கிலோ) ரூ.2,800, துவரம் பருப்பு (100 கிலோ) ரூ.8,200, நயம் துவரம் பருப்பு (100 கிலோ) ரூ.9 ஆயிரம், பாசிப்பருப்பு (100 கிலோ) ரூ.8,900, லயன் உளுந்து (100 கிலோ) ரூ.7,100, பாசிப்பயறு (100 கிலோ) ரூ.8,600, பட்டாணிப் பருப்பு (100 கிலோ) ரூ.5,700 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com