சிவகாசி மாநகராட்சியில் ரூ. 1.70 கோடியில் பெத்துமரத்து ஊருணியை சீரமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 20th May 2022 10:23 PM | Last Updated : 20th May 2022 10:23 PM | அ+அ அ- |

சிவகாசி மாநகராட்சியில் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெத்துமரத்து ஊருணியை ரூ. 1.70 கோடியில் சீரமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து இந்த ஊருணியை சீரமைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் லலிதாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த ஊருணி சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் நடைபயிற்சிக்கான தளம் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.