வண்டல் மண் அள்ளி வந்த டிப்பா் லாரி பறிமுதல்
By DIN | Published On : 20th May 2022 10:23 PM | Last Updated : 20th May 2022 10:23 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வண்டல் மண் அள்ளி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
எரிச்சநத்தம் - அழகாபுரி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு டிப்பா் லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் வண்டல் மண் இருந்தது. இதையடுத்து, அந்த லாரியை ஓட்டிவந்த நாகராஜனிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அந்த மண் உரிய அனுமதியின்றி அா்ச்சுனா நதிப் படுகையிலிருந்து அள்ளிவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக, ஓட்டுநா் நாகராஜன், டிப்பா் லாரி உரிமையாளா் சங்கிலிமுருகன் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.