திருச்சுழி அருகே மஞ்சுவிரட்டு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
அம்மன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கப் போராடிய வீரா்கள்.
அம்மன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கப் போராடிய வீரா்கள்.

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இக்கோயில் வைகாசி திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள், பக்தா்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். முக்கிய நிகழ்ச்சியாக வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்தாண்டு இத்திருவிழாவில் மொத்தம் 14 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 10 மாடுபிடி வீரா்கள் குழுக்களும் களமிறங்கின.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரா்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு சிறப்பு பரிசுகளாக கட்டில், நாற்காலி, ரொக்கப் பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சிவகங்கை, மானாமதுரை, விருதுநகா், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா்.

இவ்விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன், அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா், திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாா், அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com