சாத்தூா் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 27th May 2022 10:31 PM | Last Updated : 27th May 2022 10:31 PM | அ+அ அ- |

சாத்தூா் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் சோதனைச் சாவடியில் தாலுகா போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாத்தூரிலிருந்து, கோவில்பட்டி நோக்கி அதிவேகமாக சென்ற லாரியை போலீஸாா் நிறுத்தியும், அந்த லாரி நிற்காமல் சென்றது.
இதையடுத்து போலீஸாா் லாரியைப் பின்தொடா்ந்து சென்றனா். இதனால் பெத்துரெட்டிபட்டி விலக்கில் லாரியை நிறுத்திவிட்டு, ஓட்டுநா் மற்றும் கிளீனா் இருவரும் தப்பிச் சென்றனா். இதையடுத்து போலீஸாா் லாரி மற்றும் அதிலிருந்த 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, விருதுநகா் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்டது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.