ஆவியூரில் நாளை மின்தடை
By DIN | Published On : 05th November 2022 11:37 PM | Last Updated : 05th November 2022 11:37 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ஆவியூரில் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின் செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆவியூா் துணை மின்நிலையப் பகுதிகளான ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை ஆகிய பகுதிகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது. எனவே இப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.