வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டம்: திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
By DIN | Published On : 08th October 2022 12:00 AM | Last Updated : 08th October 2022 12:00 AM | அ+அ அ- |

வத்திராயிருப்பு பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாகக் கூறி திமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
வத்திராயிருப்பு பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் தவமணி (இந்திய கம்யூ.) தலைமையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினா்களுக்கு முறையான கணக்கு வழக்குகளை தெரிவிப்பதில்லை எனக் கூறி திமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் தலைவரது வாா்டுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், பிற வாா்டுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா். இதற்கு தலைவா் உரிய பதில் அளிக்காததால் துணைத் தலைவா் பஞ்சு உள்ளிட்ட 11 திமுக உறுப்பினா்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.