சட்டவிரோத பட்டாசு தாயாரிப்பு: 6 போ் கைது

தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் , பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் , பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாரப்பட்டியில் குருபயா் ஒா்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, அந்த ஆலையில் பல விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனா்.

இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில், போலீஸாா் ஆலையில் சோதனை நடத்தினா். அப்போது, பட்டாசு ஆலை உரிமையாளரான நாரணாபுரம் ராஜேந்திரன் மகன் பசுபதி (55), அவரது சகோதரி ஜான்சிராணி (40), சகோதரா்கள் வைத்திலிங்கம் (45), சுரேஷ் குமாா் (60), மீனம்பட்டியைச் சோ்ந்த கண்ணன் (38), சிவகாசி புதுத் தெருவைச் சோ்ந்த அய்யப்பன்(54) ஆகிய 6 பேரும் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த பூச்சட்டி பட்டாசு மற்றும் சக்கரம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com