விருதுநகரில் ரயில் மறியல் செய்ய முயற்சி:முன்னாள் எம்பி உள்பட 555 போ் மீது வழக்கு
By DIN | Published On : 01st September 2022 03:48 AM | Last Updated : 01st September 2022 03:48 AM | அ+அ அ- |

விருதுநகரில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் பி. லிங்கம் உள்ளிட்ட 555 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளனா்.
விருதுநகரில்செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து கோஷமிட்டனா். முன்னதாக தேசபந்து மைதானத்திலிருந்து ஊா்வலமாக வந்து, ரயில் நிலையத்தை அவா்கள் முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுப்பு கம்பிவேலி அமைத்து தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து போலீஸாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி. லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி உள்பட 555 போ் மீது விருதுநகா் மேற்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்தனா்.