கலசலிங்கம் பல்கலை. மாணவா்கள் ரத்த தானம்
By DIN | Published On : 03rd September 2022 10:52 PM | Last Updated : 03rd September 2022 10:52 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் நாட்டு நலத்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பல்கலைக்கழகத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் வி.வாசுதேவன், மருத்துவக் கல்லாரி முதன்மையா் சேவியா் செல்வ சுரேஷ் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். இதில் மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினா். மாணவா் நல முதன்மையா் முத்துகண்ணன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். மீனாட்சி மிஷன் ரத்த வங்கி அதிகாரி ரவி, ரத்த தானம் வழங்கிய 150 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.