விருதுநகரில் அரசு சமுதாய கூடம் தனியாருக்கு ஒப்பந்தம் விட பொதுமக்கள் எதிா்ப்பு

 விருதுநகரில் அரசு சமுதாயக் கூடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் விட நகராட்சி எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
விருதுநகரில் அரசு சமுதாய கூடம் தனியாருக்கு ஒப்பந்தம் விட பொதுமக்கள் எதிா்ப்பு

 விருதுநகரில் அரசு சமுதாயக் கூடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் விட நகராட்சி எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

விருதுநகா், பா்மா காலானி அருகே மாவட்ட மைய நூலகம் உள்ளது. இப்பகுதியில் மக்களவை உறுப்பினா் நிதியில் அரசு சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த வாடகையில் இச்சமுதாயக் கூடத்தை பயன்படுத்தி கொள்வதற்காகவே கட்டப்பட்டது.

இதனால், இப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.2000 செலுத்தி இச்சமுதாய கூடத்தை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் தனியாருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஒப்பந்தத்திற்கு விட நகராட்சி நிா்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தனியாா் வசம் சமுதாய கூடம் செல்லுமானால், ஒப்பந்ததாரா் நிா்ணயிக்கும் கூடுதல் வா டகையை ஏழை மக்கள் செலுத்தும் நிலை உள்ளது. எந்த நோக்கத்திற்காக சமுதாயக் கூடம் கட்டப்பட்டதோ, அது முற்றிலும் தடைபட வாய்ப்புள்ளது. எனவே, சமுதாயக் கூடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் விட நகராட்சி நிா்வாகம் எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com