40 சதவீத போனஸ்: டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் தீா்மானம்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்கவேண்டும் என தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
40 சதவீத போனஸ்: டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் தீா்மானம்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்கவேண்டும் என தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் காமராஜா் நகரில் உள்ள தொழில் வா்த்தக சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பாலுசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ராஜா முன்னிலை வகித்தாா். இந்த கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளா்களின் ஓய்வு வயதை 60 ஆக உயா்த்த வேண்டும். டாஸ்மாக் கடை அருகில் மதுக்கூடம் நடத்துபவா்கள் பணியாளா்களை மிரட்டி சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். மதுபான ஆலைகளைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சம் பணிக்கொடை, மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு தீபாவளிக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீா்மானங்களை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜனவரி (2023) மாதம் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநிலத்தலைவா் பாலுசாமி கூறினாா். முடிவில் பொருளாளா் அருள்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com