சமையல் எரிவாயு நுகா்வோா் முன்பதிவு செய்ய முடியாமல் அவதி
By DIN | Published On : 08th September 2022 10:39 PM | Last Updated : 08th September 2022 10:39 PM | அ+அ அ- |

வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளையைப் பெற முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் அவதிப்பட்டு வருகின்றனா்.
வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளை பெறுவதற்கு 77189 55555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளும்போது இணைப்பு கிடைத்த சிறிது நேரத்தில் எவ்வித பதிலும் வருவதில்லை. இதனால், எரிவாயு உருளை பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு எரிவாயு உருளை மட்டுமே உள்ள பெண்கள் பலா், அன்றாட உணவு சமைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து எரிவாயு உருளை வழங்கும் முகவா்கள் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக சா்வா் பிரச்னை காரணமாக முன்பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னை குறித்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.