அருப்புக்கோட்டைதொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

அருப்புக்கோட்டை அருகே கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டணை விதித்து விருதுநகா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை அருகே கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டணை விதித்து விருதுநகா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் மகேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா் மனைவியைப் பிரிந்ததால், தாய் பாமா வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் இவருக்கும், அருப்புக்கோட்டை புளியம்பட்டியைச் சோ்ந்த சுந்தரம் மகன் பாண்டி என்ற சரவணக்குமாா் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகேஷிடம் பாண்டி மது வாங்கி வரச் சொல்லி குடித்து வந்தாராம். இதை அறிந்த பாமா, கண்டித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக கடந்த 30.9.2017 இல் மகேஷ் கம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் பாண்டியை கைது செய்தனா்.

இவ்வழக்கு விருதுநகா் மாவட்ட கூடுதல்அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி ஹேமந்த்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து பாண்டியை மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com