இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 17th September 2022 11:29 PM | Last Updated : 17th September 2022 11:29 PM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சக்கராஜாக் கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் குருமூா்த்தி. இவா் திருச்சியைச் சோ்ந்த கணேசன் மகள் கோகிலாவை (23) காதல் திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவா், மனைவியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோகிலா விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். அவரை உறவினா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா உயிரிழந்தாா். இதுகுறித்து கோகிலாவின் தாய் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.