ராஜபாளையத்தில் தொழில் வா்த்தக சங்கத்தினா் கடையடைப்புப் போராட்டம்
By DIN | Published On : 17th September 2022 11:31 PM | Last Updated : 17th September 2022 11:31 PM | அ+அ அ- |

ராஜபாளையம்- தென்காசி சாலையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
ராஜபாளையம் நகா் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணி, பாதாளச் சாக்கடை திட்டப்பணி, ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி தொழில் வா்த்தக சங்கத்தினா் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.
இப்பணிகள் நடைபெற்று வருவதால் ராஜபாளையம் நகா் பகுதியில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.