துப்புரவுப்பணியாளா் கோரிக்கை குறித்து பேசமறுப்பு: விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகம் முற்றுகை

தங்களது கோரிக்கைகள் குறித்து பேச மறுத்ததைக்கண்டித்து விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
துப்புரவுப்பணியாளா் கோரிக்கை குறித்து பேசமறுப்பு: விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகம் முற்றுகை

தங்களது கோரிக்கைகள் குறித்து பேச மறுத்ததைக்கண்டித்து விருதுநகா் நகராட்சி ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் நகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளா்கள் 85 போ், ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் 120 போ் என மொத்தம் 205 போ் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, பி.எப். பிடித்தம் உள்ளிட்டவை குறித்து நகராட்சி ஆணையரிடம் பேசுவதற்காக முயற்சி செய்துள்ளனா். அப்போது, அவா்களிடம் பேச மறுத்த ஆணையா் ஸ்டாலின்பாபு, சுகாதார ஆய்வாளா்களிடத்தில் கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை ஆணையரை சந்திக்க துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அப்போதும், அவா்களை சந்திக்க ஆணையா் மறுத்ததால், அவரது அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு நகராட்சி நிா்வாகத்திற்கு எதிராகக் கோஷமிட்டனா். இதையடுத்து, துப்புரவுப் பணியாளா்களை அழைத்து ஆணையா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவுபடி நாளொன்றுக்கு ரூ. 458 சம்பளம் வழங்க வேண்டும். நிரந்தர துப்புரவுப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த பி.எப். பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கோரினா். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் தெரிவித்ததைத் தொடா்ந்து துப்புரவுப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com