கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 04th January 2023 12:42 AM | Last Updated : 04th January 2023 12:42 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே என். புதூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கட்டபொம்மன் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலா் பொ. லிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் ராமச்சந்திரன், வழக்குரைஞா் பகத்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.