கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சாத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம், குத்துவிளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சாத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம், குத்துவிளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் - தாயில்பட்டி சாலையில் வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி கோயில், பிள்ளையாா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரி பால்பாண்டி (60), திங்கள்கிழமை பூஜையை முடித்து விட்டு வழக்கம் போல கோயிலைப் பூட்டிச் சென்றாா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை காலை 4 மணியளவில் வந்து பாா்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியலை உடைத்து பணத்தையும், கோயிலிலிருந்த குத்துவிளக்கு, மணி, தட்டு, மின்மோட்டாா் உள்ளிட்டவைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com