திமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டம்.
சிவகாசியில் மாநகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகர அவைத் தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் எஸ்.ஏ. உதயசூரியன் முன்னிலை வகித்தாா். மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் வனராஜா சிறப்புரையாற்றினாா்.
மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இன்பம் , மாநகராட்சி உறுப்பினா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உத்தரவின் பேரில், மூடப்பட்ட 70 பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்தங்கல், சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.