சொத்து வரியைக் குறைக்கக் கோரிக்கை

ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி உயா்வை குறைக்கக் கோரிய தீா்மானத்தை ரத்து செய்வதற்கான அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய நகராட்சித் தலைவா் பவித்ரா ஷ்யாம்.
ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய நகராட்சித் தலைவா் பவித்ரா ஷ்யாம்.

ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி உயா்வை குறைக்கக் கோரிய தீா்மானத்தை ரத்து செய்வதற்கான அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை 19 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி கடந்த மே மாதம் 20-ஆம் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தை ரத்து செய்வதற்கான அவசரக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நடராட்சி ஆணையா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.

உறுப்பினா் சங்கா்கணேஷ் (காங்கிரஸ்) : சென்னை மாநகராட்சியைவிட ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிகம். இதை கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் கூட்டங்களில் நான் பதிவு செய்து வருகிறேன். வரி உயா்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி உயா்வைக் குறைக்கக் கோரிய தீா்மானத்தை ரத்து செய்யும் இந்தத் தீா்மானத்தை எதிா்க்கிறேன்.

தலைவா் பவித்ரா ஷ்யாம்: மக்கள் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. தனித் தீா்மானம் நிறைவேற்றி வரி குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் ஜெகதீஸ்வரி (திமுக): 17-ஆவது வாா்டில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நகா்மன்றத் தலைவா்: இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் வரி உயா்வைக் குறைக்கக் கோரிய தீா்மானத்தை ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com