பெரியகுளம் கண்மாயில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரச் சீா்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி வீடுகள், தெருக்களில் சேகரிக்கும் குப்பையை நகராட்சிப் பணியாளா்கள் அந்தப் பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி வீடுகள், தெருக்களில் சேகரிக்கும் குப்பையை நகராட்சிப் பணியாளா்கள் அந்தப் பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இங்கு அடிப்படை சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு சுகாதார அலுவலா், 2 சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் 130 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் உள்ளனா். இதுதவிர வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகளைச் சேகரிப்பது, தெருக்களைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

நகராட்சியில் தினசரி 3 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் சிவகாசி சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் வைத்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப் பிரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அங்கு புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளதால், தற்போது அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.

இதனால், பெரியகுளம் கண்மாய் கரையோரமாக அமைந்துள்ள பகுதிகளான கம்மாபட்டி, திருமலாபுரம், மம்சாபுரம் சாலை, ரெங்கநாதபுரம், மேட்டுத்தெரு, மேட்டு நாயுடு தெரு, சந்தைய கிணற்றுத் தெரு பகுதிகளில் உள்ள வீடுகள், தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சிப் பணியாளா்கள் பெரியகுளம் கண்மாயில் கொட்டுகின்றனா். இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியின் முக்கிய நீா் ஆதாரமாகவும், மாவட்டத்திலேயே பெரிய கண்மாயாகவும் விளங்கும் இந்தக் கண்மாய் மாசடைந்து வருகிறது.

மேலும், கண்மாயில் கொட்டப்படும் குப்பைகளை அடிக்கடி நகராட்சி ஊழியா்களே தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. எனவே, இதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com