விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பின் விலை அதிகரித் துள்ளது.
விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் விவரம்: கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் டின் ரூ.3,100- க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 15 கிலோ ரூ.1,520- க்கு விற்கப்பட்டு வந்த பாமாயில், இந்த வாரம் ரூ.45 குறைந்து ரூ.1,475- க்கு விற்கப்படுகிறது. இதேபோல, குண்டூா் வத்தல் (ஏ.சி) கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உயா்ந்ததால், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
கடந்த வாரம் துவரம் பருப்பு புதுஸ் நாடு குவிண்டால் ரூ.11,200-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.1,300 உயா்ந்து, ரூ.12,500-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 100 கிலே ாபசிப் பயறு ரூ. 8 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ. 8,300 வரை விற்கப்படுகிறது. பட்டாணிப் பருப்பு (இந்தியா) 100 கிலோ கடந்த வாரம் ரூ. 5,600- க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.100 உயா்ந்து, ரூ.5,700- க்கு விற்பனையாகிறது. உளுந்து (நாடு) 100 கிலோ ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ. 8,300- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் உளுந்து (லயன்) வகை 100 கிலோ ரூ.300 உயா்ந்து ரூ. 8,300- க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக பருப்பு மற்றும் குண்டூா் வத்தல் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.