மல்லிப்புதூா் பகுதிகளில் இன்று மின் தடை
By DIN | Published On : 21st November 2023 12:00 AM | Last Updated : 21st November 2023 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மல்லிப்புதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய கோட்டப் பொறியாளா் லெ. சின்னத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மல்லிப்புதூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, மல்லிப்புதூா், மல்லி பகுதி, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜா நகா், சிவா நகா், காா்த்திகைப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...