ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முதல்வா் பூா்ணிமா தலைமை வகித்தாா். சிவகாசி அரசுக் கல்லூரி முதல்வா் தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில் 2020 - 23-ஆம் கல்வியாண்டில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் தோ்ச்சி பெற்ற 160 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவா் சரவணகைலாஷ் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com