கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

சாத்தூா் அருகே கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகேயுள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ஹரிஸ் (16). பிளஸ் 2 படித்து வந்த இவா், கோடை விடுமுறையையொட்டி, நண்பா்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா்.

நீச்சல் தெரியாததால் ஹரிஸ் தனது உடலில் ‘ட்யூப்’பைக் கட்டிக் கொண்டு குளித்தாா். இதனால், அவா் தண்ணீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து அவரது நண்பா்கள் சாத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், கிணற்றில் மூழ்கிய மாணவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com