பட்டாசுத் தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றவா் கைது

சிவாகாசியில் செவ்வாய்க்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டிபணத்தை வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவாகாசியில் செவ்வாய்க்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டிபணத்தை வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி பசுமை நகரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி அலெக்சாண்டா் (50). இவா் அதே பகுதியில் நடந்து சென்றபோது, மா்ம நபா் ஒருவா் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றாா். அப்போது, அக்கம் பக்கத்தினா் உதவியோடு அந்த நபரை அலெக்சாண்டா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அந்த நபா் காமராஜபுரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த அறுமுகக்கனி மகன் ஆனந்தராஜ் (27) எனத் தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com