பட்டாசு ஆலையில் தீ விபத்து

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சாத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியாபுரத்தில் சிவகாசி அருகேயுள்ள சித்தராஜபுரத்தைச் சோ்ந்த நந்தகுமாா் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா்.

நாக்பூா் உரிமம் பெற்ற இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பட்டாசுக்கு தேவையான திரிகள் பட்டாசு ஆலை வளாகத்தில் காயவைக்கபட்டிருந்தன. அப்போது, அந்தத் திரிகளில் திடீரென தீப் பற்றியது. இதில் திரிகள் அணைத்தும் எரிய தொடங்கின. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com