திமுக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

வெம்பக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து,அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

வெம்பக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து,அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அதிமுக விருதுநகா் கிழக்கு மாவட்ட கழக செயலாளா் ஆா்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினா் கருணாநிதி மகனும் மருமகளும் அவா்கள் வீட்டில் பணிபுரிந்த பட்டியலின இளம் பெண்ணை வன்கொடுமை செய்து துன்புறுத்தியதை கண்டித்தும்அந்த பெண்ணிற்கு நீதி வழங்கிட வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்திற்கு அதிமுக சாத்தூா் நகர,ஒன்றிய,வெம்பக்கோட்டை ஒன்றிய கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com