சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிறுமியின் படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


விருதுநகா்: சிறுமியின் படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமி ஒருவா் பிளஸ் 2 படித்து வருகிறாா். அந்த சிறுமிக்கும், ஒரு சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துள்ளனா்.

இந்த நிலையில், சிறுமி, சிறுவனுடன் பேசுவதைத் தவிா்த்து வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டினாா். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை பெற்றோா், உறவினா்கள் மீட்டனா். இதுகுறித்து புகாரின் பேரில் சிறுவன் மீது அருப்புக்கோட்டை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com